ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,353 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
1,353 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 969 ஆக உயர்ந்தது.
இதில் 62 ஆயிரத்து 588 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,982 பேர் குணமடைந்தனர். தற்போது 11 ஆயிரத்து 892 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 8 ஆயிரத்து 518 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நகர்புறத்தில் 38 இடங்களில் 215 பேரும், கிராமப்புறங்களில் 113 இடங்களில் 579 பேரும் என மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 794 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியும் வகையில் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 17 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
3 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 45 வயது ஆண் கடந்த 5-ந் தேதியும், 45 வயது ஆண், 50 வயது பெண் ஆகியோர் நேற்றும் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 489 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story