பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குறைத்து கணக்கு காட்டிய 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குறைத்து கணக்கு காட்டிய 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 5:53 AM IST (Updated: 13 Jun 2021 5:53 AM IST)
t-max-icont-min-icon

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குறைத்து கணக்கு காட்டிய 2 போலீஸ் ஏட்டுகளை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

ஈரோடு
பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குறைத்து கணக்கு காட்டிய 2 போலீஸ் ஏட்டுகளை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.
மது கடத்தல்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கடந்த 8-ந் தேதி சித்தோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்தி நிறுத்தி  சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் வாகனத்தில் மது கடத்தி வரப்பட்டது தெரிய  வந்தது. இதைத்தொடர்ந்து      மதுவை கடத்தியதாக வாகன ஓட்டியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த வழக்கில் 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மது விலக்கு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் 16 மது பாட்டில்கள் மட்டுமே வழக்கில் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கோபி மது விலக்கு போலீஸ் ஏட்டுகள் பூர்ணசந்திரன், பெரியசாமி ஆகியோர் பறிமுதல் செய்த மது பாட்டில்களை குறைத்து கணக்கு காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் நடவடிக்கை எடுத்தார்.
1 More update

Next Story