சித்தோடு அருகே எண்ணெய் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை


சித்தோடு அருகே எண்ணெய் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
x

சித்தோடு அருகே எண்ணெய் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பவானி
சித்தோடு அருகே எண்ணெய் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எண்ணெய் கடை உரிமையாளர்
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 67). அவருடைய மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஜெயக்குமார் தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு இந்திராநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த பகுதியிலேயே சமையல் எண்ணெய் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வந்தார். இதில் குணமடைந்ததை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
தீக்குளித்து தற்கொலை
இந்த நிலையில் ஜெயக்குமாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீட்டின் குளியல் அறைக்கு சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு்க்கொண்டார். பின்னர் அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story