கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அரசின் சித்த மருத்துவ பிரிவு தொடக்கம்
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அரசின் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அரசின் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகள்
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சிறப்பு மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சித்தா பிரிவு
பெருந்துறையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஏற்கனவே கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசின் சித்தா மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சித்தா மருத்துவ பிரிவில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story