சென்னிமலை பகுதியில் ஊரடங்கை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்ட2 நிறுவனங்களுக்கு அபராதம்

சென்னிமலை பகுதியில் ஊரடங்கை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை பகுதியில் ஊரடங்கை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பனியன் நிறுவனத்துக்கு அபராதம்
சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள திருநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி அதிக பணியாளர்களுடன் பனியன் நிறுவனம் ஒன்று செயல்படுவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரியவந்தது.
இதனால் ஊரடங்கு உத்தரவை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது பனியன் நிறுவன நிர்வாகிகளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறும்போது, ‘தொடர்ந்து இது போல ஊரடங்கு உத்தரவை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்பட்டால் நிறுவனத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்படும்’ என்று எச்சரித்தார்.
ஆயத்தஆடை நிறுவனம்
இதேபோல் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியில் தனியார் ஆயத்தஆடை நிறுவனத்தில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி அதிக பணியாளர்களுடன் செயல்படுவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி மற்றும் போலீசார் அந்த நிறுவனத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக பணியாளர்களுடன் அந்த நிறுவனம் செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story






