சீர்காழி பகுதியில் ரூ.78 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி
சீர்காழி பகுதியில் ரூ.78 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உதவி செயற்பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய பாசன மற்றும் வடிவாய்க்கால் மற்றும் ஆறுகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கூப்பிடுவான் உப்பனாறு, மண்ணியாறு வாய்க்கால், வெள்ளப்பள்ளம் உப்பனாறு உள்ளிட்ட வாய்க்கால்களை அரசு தூர்வார உத்தரவிட்டது அதைத் தொடர்ந்து ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் மேற்கண்ட வாய்க்கால்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் முறையாக தூர்வாரவில்லை என்று நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) மரியசூசை கூப்பிடுவான் உப்பனாற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிவர்த்தி செய்யப்படும்
அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கூப்பிடுவான் உப்பனாறு சட்ரஸ் தலைப்பில் இருந்து காரைமேடு வரை 5 கிலோ மீட்டர் தூரம் முழுமையாக தூர்வார பட உள்ளது. விவசாயிகள் தூர்வாரும் பணி முடிவு பெற்றதாக தவறுதலாக புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை ஓரிரு வாரத்திற்குள் பணிகள் முழுமையாக முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் ஆழமான பகுதிகளில் உள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகளை எந்திரம் மூலம் அகற்ற முடியாததால் ஆட்களை கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. தூர்வாரும் பணியில் குறைகள் இருந்ததால் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலரிடம் புகார் செய்யலாம். உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
நடவடிக்கைகள்
சீர்காழி பகுதியில் உள்ள வாய்க்கால் மற்றும் ஆறுகளை தூர்வாரும் பணி மிக விரைவில் முடிக்க ஒப்பந்தக்காரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் விரைவில் சீர்காழி பகுதிக்கு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது பொறியாளர் வெங்கடேசன், தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குலோத்துங்கன், மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story