தஞ்சையில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சாம்பல்


தஞ்சையில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 13 Jun 2021 7:29 PM IST (Updated: 13 Jun 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமடைந்தன.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலை வடக்கு தோட்டம் பகுதியில் அடகு கடை, மளிகைக் கடை, மெத்தை கடை என மூன்று கடைகள் அடுத்து வரிசையாக உள்ளன. இந்த கடைகளில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்ததுடன் தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போராடி அணைத்தனர்

ஆனால் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி கடைகள் முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. தீ விபத்தினால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து இருக்கலாம் என தெரியவருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story