விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மினி ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு


விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மினி ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 8:53 PM IST (Updated: 13 Jun 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக ரூ.25 லட்சம் மதிப்பில் 100 லிட்டர் கொள்ளளவுடைய மினி ஆக்சிஜன் உற்பத்திசெய்யும் மையத்தை அமைத்தனர்.

விக்கிரவாண்டி,

முண்டியம்பாக்கத்தில் உள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிறுவனத்தினர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக ரூ.25 லட்சம் மதிப்பில் 100 லிட்டர் கொள்ளளவுடைய மினி ஆக்சிஜன் உற்பத்திசெய்யும் மையத்தை அமைத்தனர். இதையடுத்து அதனை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி டீன் குந்தவிதேவி தலைமை தாங்கி மினி ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் 20 கொரோனா நோயாளிகள் இந்த மையத்தின் மூலம் பயன்பெற முடியும். தக்க சமயத்தில் மருத்துவமனையின் தேவையறிந்து மினி ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் அமைத்து கொடுத்துள்ளனர் என்றார். இதில் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை உப தலைவர் ரமேஷ், டாக்டர்கள் மகேந்திரன், பாண்டியன், ஆலை அதிகாரிகள் ராமானுஜம், திருஞானம், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story