பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:23 PM IST (Updated: 13 Jun 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கடலூர்,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர்கள் வெங்கடேஷ், கலைச்செல்வன், விக்கி, மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளரும், வக்கீலுமான ஏ.எஸ். சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் பாண்டு, மீனவர் அணி மாவட்ட தலைவர் கடல் கார்த்திகேயன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் ராமராஜ், சேவா தளம் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் அன்பழகன், சதாசிவம், ஜெயமூர்த்தி, ஐ.என்.டி.யூ.சி ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

Next Story