முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Jun 2021 2:33 AM IST (Updated: 14 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்வத்தான்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 70). இவருடைய மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் பழனியப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயலில் வேலை பார்த்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து அவர் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story