ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) போடப்படுகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) போடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றன. இதைத்தொடர்ந்து நேற்று 42 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) 69 இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளும், நசியனூர், திண்டல், சிறுவலூர், கூகலூர், அயலூர், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்படுகிறது. பி.வெள்ளாளபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 கோவிஷீல்டு, கோபி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 250 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்படுகிறது.
உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின், ராஜன்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 கோவிஷீல்டு, 50 கோவேக்சின், குடியலூர், கே.என்.பாளையம், கடம்பூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும், சத்தியமங்கலம், நம்பியூர், டி.என்.பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட உள்ளன.
அத்தாணி, பவானி
ஈ.செட்டிபாளையம், கெட்டிசெவியூர், மலையபாளையம், கோபி அருகே உள்ள காசிபாளையம், கள்ளிப்பட்டி, டி.ஜி.புதூர், தாளவாடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படும். பின்னபுரம், கொங்கல்வாடி, சூசைபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 கோவிஷீல்டு, கேர்மாளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின், சி.டி.பாளையம், எண்ணமங்கலம், ஒலகடம், ஆலம்பாளையம், மைலம்பாடி, பெரியபுலியூர், ஓடத்துறை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.
குருவரெட்டியூர், ஜம்பை, பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும், ஓசூர், அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர், ஆப்பக்கூடல், விண்ணப்பள்ளி, பெத்தாம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
ஈரோடு மாநகராட்சி
விஜயமங்கலம், காஞ்சிக்கோவில், கணபதிபாளையம், அவல்பூந்துறை, எழுமாத்தூர், ஜெயராமபுரம், சிவகிரி, சென்னசமுத்திரம், தாண்டாம்பாளையம், கொம்பனைபுதூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 150 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும், கருமாண்டிசெல்லிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னிமலை, பி.காசிபாளையம், மொடக்குறிச்சி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும், வெள்ளோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு, 250 கோவேக்சின் தடுப்பூசிகளும், கொடுமுடி அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் 200 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்படுகிறது.
இதேபோல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் 450 கோவிஷீல்டு, 50 கோவேக்சின் தடுப்பூசிகளும், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 2 ஆயிரம் கோவிஷீல்டு, 500 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட உள்ளன. எனவே இந்த மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story