ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 6:11 AM IST (Updated: 14 Jun 2021 6:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மீன், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு
ஈரோட்டில் மீன், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
மீன் - இறைச்சி கடைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலில் ஈரோடு மாவட்டம் 2 -வது இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியாக செயல்படும் மீன் கடைகள், இறைச்சி கடைகளில் காலை முதல் மாலை வரை வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதே சமயம் மீன் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், ஈரோடு மாநகரில் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் செயல்படவில்லை.
மக்கள் கூட்டம்
ஈரோடு காவிரி ரோடு மீன் மார்க்கெட், தனியாக செயல்படும் மீன் கடைகள், இறைச்சி கடைகள் வழக்கம் போல் நேற்று செயல்பட்டன. இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடை மற்றும் அந்த பகுதிகளில் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். பார்சல் மூலம் மட்டுமே இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story