குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி
சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் அகற்றும் நோக்கத்தோடு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், தொழிலாளர் துறை, சைல்ட் ஹெல்ப் லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு மற்றும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதையொட்டி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை ஏற்று பின்னர் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பா, உதவி தொழிலாளர் ஆணையர் லோகேஸ்வரன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் முத்து பிரகாஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story