பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெசிந்தா இருதயராஜ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அரிகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், வெங்கடேசன், புதுமாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story