வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 14 Jun 2021 4:27 PM IST (Updated: 14 Jun 2021 4:27 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். அதன்படி வைகாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story