செக்கானூரணி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
செக்கானூரணி
செக்கானூரணி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
செக்கானூரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி செக்கானூரணி அருகே உள்ள ஊத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த இரண்டு இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
4 பேர் கைது
இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்களிடம இருந்து 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா கடத்தி வந்ததாக மதுரையை சேர்ந்த ஹரிகரன்(வயது 20), தங்கபாலு(24), பாம்பு நாகராஜ்(26) மற்றும் சோழவந்தானை சேர்ந்த விஜய்(27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் இந்த கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர்? எங்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story