ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்


ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:15 PM GMT (Updated: 14 Jun 2021 10:15 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது. 
கொரோனா நிவாரண நிதி
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதில் முதல் கட்டமாக கடந்த மாதம் 15-ந்தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருட்கள் பேக்கிங் செய்வதில் காலதாமதம் ஆனதால் வருகிற 15-ந்தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இன்று வழங்கப்படுகிறது
ஈரோடு மாவட்டத்தில் 1,152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 62 ஆயிரம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை டோக்கன் வழங்கினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்குகிறது. இதற்காக ஈரோடு வீரப்பன்சத்திரம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு 14 வகையான பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.

Next Story