இப்படி சிக்கி விட்டதே...!


இப்படி சிக்கி விட்டதே...!
x
தினத்தந்தி 15 Jun 2021 11:43 PM IST (Updated: 15 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி மண்சாலையில் சரக்கு லாரியின் பின்சக்கரம் விபத்துக்குள்ளாகி சிக்கி கொண்டது.

காரைக்குடி வாட்டர் டேங்க் சாலை பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை. இதனால் ஆங்காங்கே பள்ளமாக காணப்படும் மண்சாலையில் நேற்று அந்த வழியாக ரேஷன் பொருட்கள் ஏற்றி சென்ற சரக்கு லாரியின் பின்சக்கரம் மண்ணுக்குள் புதைந்து சிக்கி கொண்டது. இப்படி சிக்கி விட்டதே என்று வேதனை அடைந்த லாரி டிரைவர் பிறகு அதை மீட்கும் பணியில் ஈடுபட்டார். காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story