மாவட்ட செய்திகள்

மதுரையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 192 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் உயிரிழந்தனர் + "||" + 192 affected in one day in Madurai; 6 fatalities

மதுரையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 192 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் உயிரிழந்தனர்

மதுரையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 192 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் உயிரிழந்தனர்
மதுரையில் ஒரே நாளில் 192 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு
மதுரை
மதுரையில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 192 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
192 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்போது சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் மதுரையில் மாவட்டத்தில் நேற்று 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 
சுமார் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 192 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 153 பேர் நகர் பகுதியையும். மற்றவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.
6 பேர் உயிரிழப்பு
மேலும் நேற்று ஒரே நாளில் 901 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 737 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை சேர்ந்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், சிகிச்சை பெறுவேரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று மதுரையில் 3 ஆயிரத்து 623 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதுதவிர மதுரையில் நேற்று 6 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1042 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 24 பேருக்கு கொரோனா
24 பேருக்கு கொரோனா
2. மேலும் 13 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 29245 ஆக உயர்வு
4. புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 11 மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு: தமிழகத்தில் 1,908 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.