மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
x
தினத்தந்தி 15 Jun 2021 7:46 PM GMT (Updated: 2021-06-16T01:16:31+05:30)

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலி

மேலூர்
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேன் மோதியது
மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைப்பட்டியை சேர்ந்தவர்கள் பிரபு (வயது 32), கணேசன்(30). இதில் பிரபு எலக்ட்ரீசியன் ஆவார். கணேசன் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா பரவலின் காரணமாக சொந்த ஊரான வண்ணாம்பாறைப்பட்டிக்கு வந்திருந்தார். 
இந்தநிலையில் பிரபு, கணேசன் இருவரும் அருகிலுள்ள மேலவலசை கிராமத்துக்கு நேற்று இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மேலூர்-சிவகங்கை ரோட்டில் ஒத்தப்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக சிவகங்கையில் இருந்து மேலூருக்கு வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பிரபு மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமா இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செ

Next Story