காய்கறி மூடைகளில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது


காய்கறி மூடைகளில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 1:16 AM IST (Updated: 16 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி மூடைகளில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

மதுரை
மதுரை அரசரடி பகுதியை சேர்ந்த பாரத் தீபக், கார்த்திக் இருவரும் பல ஆண்டுகளாக வேன் மூலம் இங்குள்ள சந்தைகளில் காய்கறி மூடைகளை கொண்டு இறக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இவர்கள் கடந்த சில மாதங்களாக காற்கறி மூடைகளை கொண்டு செல்வதாக கூறி கிலோ கணக்கில் கஞ்சா, புகையிலை பொருட்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் தேனி சாலை முடக்குசாலை பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரத்தீபக், கார்த்திக் ஆகியோர் வேனை நிறுத்தாமல் சென்றுள்ளனர். ஆனாலும் போலீசார் விரட்டி சென்று அந்த வேனை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில் காய்கறி மூடைகளுக்கு இடையே 4 கிலோ கஞ்சா மற்றும் 87 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் போன்றவை மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து, வேனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story