ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x

ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகரில் குடியிருந்து வருபவர் மூர்த்தி(வயது 50). இவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான கச்சைகட்டியில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கதோடு, மோதிரம், வளையல், உள்ளிட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் மற்றும் ரொக்கப்பணம் 32 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது சம்பந்தமாக ஆசிரியர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story