மதுரையில் இருந்து புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்
மதுரையில் இருந்து புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மதுரை
திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு தினமும் இரு மார்க்கங்களிலும் பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே திருச்சி செல்லும் ரெயில் மதுரையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரெயில் (வ.எண்.02628) இன்று (புதன்கிழமை) முதல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5 மணிக்கு புறப்படும். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கும், மணப்பாறையில் இருந்து மாலை 6.40 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story