மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருமங்கலம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
திருமங்கலம் பகுதியில் இன்று மின்தடை
ிருமங்கலம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருமங்கலம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
திருமங்கலம்
மதுரை அருகே உள்ள டி.கல்லுப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சந்தையூர் உயர் மின்னழுத்த பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எல்.கொட்டாணிப்பட்டி, நல்ல மரம், முத்துலிங்காபுரம், எம்.சுப்புலாபுரம், பாப்பையாபுரம், அரசப்பட்டி, தெய்வநாயகபுரம், நரிக்குடி, வி.அம்மாபட்டி, கரையாம்பட்டி ஆகிய பகுதியில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி மின்வினியோகம் இருக்காது.
திருமங்கலம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கற்பக நகர் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், திருமங்கலம், தெற்குத்தெரு, கீழப்பள்ளிவாசல், கற்பக நகர், வடகரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
மின் வினியோகம்
கப்பலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வேடர் புளியங்குளம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வேடர்புளியங்குளம், வி.பி.சித்தன் நகர், தனக்கன்குளம், தோப்பூர், அய்யர்காலனி, அகதிகள் முகாம், சாட்டிலைட் சிட்டி, பி.டி.ஆர். கல்லூரி. கப்பலூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருமங்கலம் மின்பகிர்மான செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story