சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவர் கைது


சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 3:39 AM IST (Updated: 16 Jun 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பவானி
சித்தோடு அருகே மாணவிகளுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். 
ஆபாச படம்
ஈரோடு மாவட்டம் சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு விசைத்தறி தொழிலாளிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். மாணவிகள் 3 பேரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக ஒரு வாட்ஸ்-அப் குழுவில் இணைந்து தகவல்களை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி இரவு இவர்களுடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு ஆபாச படம் அனுப்பப்பட்டு இருந்தது.  
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறினார்கள். உடனே மாணவிகளின் தாயார் இதுபற்றி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். 
சிறையில் அடைப்பு
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். ஆபாச படம் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் அதை, ஈரோடு கனி ராவுத்தர்குளம் ஞான புரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 55) என்பவர் அனுப்பியது தெரிந்தது. 
கார் டிரைவரான பொன்னுசாமியை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் மாணவிகளுக்கு ஆபாச படம் அனுப்பியதை ஒத்துக்கொண்டார். 
இதைத்தொடர்ந்து போலீசார் பொன்னுசாமியை கைது செய்து, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

Related Tags :
Next Story