நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிப்பு
நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அம்மாபேட்டை
நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்சுரங்கத்தில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக்கொண்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நெரிஞ்சிப்பேட்டை கதவணை
அம்மாபேட்டை அருகே உள்ள நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கதவனை மின் நிலையில் தலா 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 2 எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 6 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காவிரியில் வரும் தண்ணீரின் வேகத்தை பொருத்து, இங்கு மின் உற்பத்தி செய்யப்படும்.
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அப்போது அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் கதவணை மின் உற்பத்தி சுரங்கத்தில் தலா 15 மெகாவாட் என 2 இயந்திரங்களில் 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
சுரங்கப்பாதையில் அடைப்பு
தற்போது மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒரு எந்திரத்தில் 9 மெகாவாட் என இரண்டிலும் 18 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்ய முடிகிறது. இந்தநிலையில் தண்ணீரை ஆக்கிரமித்து இருந்த ஆகாயத்தாமரைகள் மின் உற்பத்தி சுரங்கத்தில் அடைத்து கொண்டன. இதனால் தண்ணீரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு 12 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 6 மெகாவாட் மின்சாரம் குறைவாக கிடைக்கிறது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 6 ஆயிரம் யூனிட் (6 மெகாவாட்) இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு அரசுக்கு ரூ.9 லட்சம் வரை இழப்பீடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் மின் உற்பத்தி செய்யும் சுரங்கப்பாதைகளை அடைக்கும் ஆகாயத்தாமரைகளை 3 சுழற்சி முறை (ஷிப்ட்) வைத்து ஆட்களை கொண்டு 24 மணி நேரமும் சுத்தம் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஒரு சுழற்சி முறையில் ஆட்களை மட்டுமே கொண்டு ஆகாயத் தாமரைகளை அகற்றுவதால் போதுமான மின் உற்பத்தி செய்ய முடிவதில்லை.
அதனால் மின் உற்பத்தி சுரங்கத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் அகற்ற 3 சுழற்சி முறையில் ஆட்களை பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story