சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது- ரூ.35 ஆயிரம் அபராதம்
சாராயம் காய்ச்ச சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஈரோடு
சாராயம் காய்ச்ச சென்னம்பட்டி, அத்தாணி வனப்பகுதியில் வெள்ளவேலா மரப்பட்டைகள் உரித்த 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
வெள்ளவேலா மரப்பட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட எண்ணமங்கலம் காப்புக்காடு மற்றும் முரளி மேற்குபீட் கீழக்கரடு வனப்பகுதியில் வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் வனக்குழுவினர் ரோந்து சென்றார் கள்.
அப்போது வனப்பகுதியில் 3 பேர் வெள்ளவேலா மரங்களில் பட்டைகளை உரித்து கொண்டிருந்தனர். உடனே வனத்துறையினர் அவர்கள் 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தார்கள்.
கைது- அபராதம்
அதன்பின்னர் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள். அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் அணைக்கரடு பகுதியைச் சேர்ந்த மாயன் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27), கோவிலூரை சேர்ந்த பெரியசாமி (39) ஆகியோர் என்பதும், சாராயம் காய்ச்சுவதற்காக இவர்கள் 3 பேரும் வெள்ளவேலா மரப்பட்டைகளை உரித்ததும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறை யினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், ஒருவருக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்தார்கள்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் வனப்பகுதியில் அத்தாணி மேற்கு பீட் உரம்பு கிணறு பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ள வேலா மரப்பட்டையை உரித்ததாக அந்தியூரை அடுத்த சேட்டு காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி (29) என்பவரை அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி கைது செய்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட சின்னதம்பிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டது. வனப்பகுதியில் நுழைந்து வெள்ள வேலா மரப்பட்டைகளை உரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story