தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
தாளவாடி
தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
வாழைகள் நாசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் தாளவாடி அடுத்த சேஷன்நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் குணசேகரனின் தோட்டத்துக்குள் புகுந்த வாழைகளை தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்தின.
இழப்பீடு
தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த குணசேகரன் யானைகளின் சத்தம் கேட்டு எழுந்து வந்த பார்த்தார். அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்துவதை கண்டு, உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்தார்கள். பின்னர் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றார்கள். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானைகள் சேதப்படுத்தியதில் சுமார் 1 ஏக்கர் அளவில் வாழைகள் நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது. சேதமடைந்த வாைழகளுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story