காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 347 ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 347 ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:34 AM IST (Updated: 16 Jun 2021 11:34 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 347 ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 653 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 347 ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2-ம் தவணை நிவாரணமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.73 கோடியே 27 லட்சம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

அதனையொட்டி காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் கூட்டுறவுத்துறை சார்பில் கொரோனா சிறப்பு நிவாரண தொகை 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனோ சிறப்பு நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனைதொடர்ந்து திருமண நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ் நிதியுதவி, தாலிக்கு தங்கம், நல வாரிய அட்டை வைத்துள்ள 3-ம் பாலினத்தை சேர்ந்த 30 நபர்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் தலா ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 52 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.

இநத நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி ஜி.செல்வம், எம்.எல்.ஏக்கள், சி.வி.எம்.பி. எழிலரசன், கு.செல்வபெருந்தகை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குனர் லோகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story