பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு


பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 Jun 2021 12:37 AM IST (Updated: 17 Jun 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 60). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் மது அருந்திவிட்டு உசிலம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது மது போதையில் வந்த பேரையூரைச் சேர்ந்த தர்மர் என்பவர் ஜெயபாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த தர்மர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயபாண்டியை சரமாரியாக வெட்டினார்.  இதில்  பலத்த காயமடைந்த ஜெயபாண்டி மயங்கி விழுந்தார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார்  பெயிண்டர் ஜெயபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  தப்பி ஓடிய தர்மரை தேடி வருகின்றனர்.

Next Story