சிறுமியை மிரட்டி திருமணம்; வாலிபர் கைது
சிறுமியை மிரட்டி திருமணம்; வாலிபர் கைது
பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள அ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் மார்நாடு(வயது 26). இவர் 13 வயது சிறுமியை உறவினர்கள் முன்னிலையில் வலுக்கட்டாயமாக மிரட்டி திருமணம் செய்துள்ளார். மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் ரதமணி சிறுமியிடம் விசாரணை செய்தார். விசாரணையில் சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மார்நாடு, உறவினர்களான தனலட்சுமி, ரவி, அஜித், சிறுமியின் தாயார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகையாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்நாடு, தனலட்சுமி, கோமதி ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story