சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில் உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்


சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில் உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:04 PM GMT (Updated: 16 Jun 2021 11:04 PM GMT)

சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்.

சென்னிமலை
சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார். 
மின்கம்பியில் உரசியது
அறச்சலூர் பகுதியிலிருந்து சீமாறு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று பகல் 1 மணி அளவில் பெருந்துறை செல்வதற்காக சென்னிமலையில் உள்ள காட்டூர் ரோடு வழியாக மெயின் ரோட்டுக்கு சென்று கொண்டு இருந்தது. லாரியில் பாரம் உயரமாக இருந்ததால் காட்டூர் பகுதியில் ரோட்டின் குறுக்கே செல்லும் மின் கம்பியில் உரசியது.
இதனால் டமார் என்ற சத்தத்துடன் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் அந்த லாரி நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது மற்றொரு டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியிலும் லாரி உரசியதால் அந்த டிரான்ஸ்பார்மரிலும் தீப்பொறியுடன் மின்தடை ஏற்பட்டது. அதன்பிறகும் அந்த லாரி நிற்காமல் சென்று கொண்டிருந்தது.
துரத்தி பிடித்தார்
அப்போது அந்த பகுதியில் வேைல பார்த்துக்கொண்டு இருந்த லைன்மேன் சின்னசாமி நிற்காமல் சென்ற லாரியை மோட்டார்சைக்கிளில் துரத்தி சென்று சென்னிமலை பஸ் நிலையம் அருகே மடக்கி பிடித்தார்.
பின்னர் லாரி டிரைவரை கண்டித்த சின்னச்சாமி, 2 டிரான்ஸ்பார்மர்களிலும் பழுது நீக்கப்பட்ட பிறகுதான் நீங்கள் செல்ல வேண்டும் என்றார்.
அதன் பிறகு 2 டிரான்ஸ்பார்மர்களிலும் பியூஸ் போடப்பட்டது. வேறு எந்த பழுதும் ஏற்படாததால் அந்த லாரியை செல்வதற்கு சின்னச்சாமி அனுமதித்தார்.
மின்கம்பியில் லாரி உரசியதால் காட்டூர், ரோஜா நகர், முல்லை நகர்,  ராஜீவ் நகர் பகுதிகளில் சுமார் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டது.

Next Story