வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் சாவு


வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் சாவு
x

வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

வங்கி ஊழியர்
காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள வெங்கடேச பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர் அய்யன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வங்கியில் பணி முடித்து முத்தியால்பேட்டை - களியனூர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.நத்தப்பேட்டை முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் வேகமாக சென்றபொழுது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலை அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சாவு
விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக் காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திகேயன் உயிரிழந்தது விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார், கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story