ஈரோட்டில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
ஈரோட்டில் நெல் மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் கரட்டி பகுதியில் இருந்து 30 டன் எடையுள்ள நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த தன்னாசி என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஈரோடு காளைமாடு சிலை அருகே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, குடிநீர் குழாய் பழுது பார்ப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் லாரியின் பின் சக்கரம் சிக்கி லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் கீழே சரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து லாரியை மீட்டனர்.
----
Related Tags :
Next Story