சென்னிமலை அருகே சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சென்னிமலை அருகே சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

பழமை வாய்ந்த கோவில்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலூகாவில் ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான சிவியார்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ளது பரமசிவன் கோவில். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 72.86 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஆட்சி காலத்தில் பரமசிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது ஆகும்.
அதன்பின்னர் 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த நிலங்கள் அனைத்தும் பரமசிவன் கோவிலுக்கே சொந்தமானது என உறுதி செய்யப்பட்டு அதற்கான ஆவணங்களும் தயார் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ரூ.20 கோடி
ஆனால் மொத்தம் உள்ள 72.86 ஏக்கர் நிலத்தில் 69.81 ஏக்கர் நிலங்கள் 19 நபர்கள் மூலம் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்து அவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் சாவடி என்ற இடத்தில் மெயின் ரோட்டை ஒட்டியபடியும், அதன் உள் பகுதியிலும் உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மூலம் கோர்ட்டில் பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வந்தது. இறுதியாக கடந்த 24-5-2019 அன்று ஆக்கிரமிப்பு செய்த அனைவரையும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யாரும் அந்த நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்கவில்லை.
கடுமையான நடவடிக்கை
இதனால் நேற்று (வியாழக்கிழமை) திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் என்.நடராஜன் தலைமையில், உதவி ஆணையர் ஆர்.எஸ்.வெங்கடேஷ், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் எம்.அருள்குமார், காங்கேயம் கோவில் ஆய்வாளர் அபிநயா மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்றி கோவில் நிர்வாகத்தின் கீழ் நிலத்தை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றது.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு "இது பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான நிலம். இதில் அத்துமீறி நுழைபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
மகிழ்ச்சி
இதுபற்றி அறநிலையத்துறை இணை ஆணையர் என்.நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் புன்செய் நிலமாக இருப்பதால் இதுவரை ஆடு, மாடு மேய்ப்பது போன்றவைகளுக்கு நிலத்தை பயன்படுத்தி உள்ளனர். இனி இந்த நிலங்கள் அனைத்தும் அறநிலையத்துறை சார்பில் பொது ஏலம் விடப்படும் என்றார்.
அப்போது கோவில் ஆய்வாளர்கள் சுகுமார் (பாரியூர் கோவில்), ரத்தினாம்பாள், செந்தில் (வெள்ளக்கோவில்), தங்கராஜ், சதீஸ் (தாராபுரம்), நால்ரோடு கிராம நிர்வாக அதிகாரி சகுந்தலா மற்றும் சென்னிமலை கோவில் பணியாளர்கள் உள்பட பலர் இருந்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் இதுவரை ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியாமல் இருந்து தற்போது அந்த நிலங்கள் மீட்கப்பட்டதை அறிந்து சென்னிமலை மற்றும் காங்கேயம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story