கடல் போல் காட்சி அளிக்கும் காவிரி ஆறு
கடல்போல் காவிரி ஆறு காட்சி அளித்தது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு காவிரி ஆற்றில் 2 கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஓடுகிறது. தண்ணீர் வேகமாக வந்ததால் கருங்கல்பாளையம் பகுதியில் தேங்கி கிடந்த ஆகாயத்தாமரைகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டு காவிரி ஆறு தூய்மையாக உள்ளது. வெண்டிபாளையம் கட்டளை கதவணை அடைக்கப்பட்டு ஒரு சில மதகுகளில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி ஆறு கடல்போல் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் ஒருபுறம் கடல்போல காட்சி அளிக்கும் காவிரி, இன்னொரு புறம் குறைவாக தண்ணீர் செல்வதால் பாறைகளின் இடையே நீரோடைபோன்று ஓடுகிறது.
ஒரு புறம் வெள்ளப்பிரவாகமும், மறுபுறம் வறண்ட ஓடையுமாக காவிரி காட்சி அளிக்கிறது.
Related Tags :
Next Story