நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு ஈரோட்டில் இருந்து கருத்துகள் அனுப்பிய சமூக ஆர்வலர்கள்
நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து ஈரோட்டில் இருந்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து ஈரோட்டில் இருந்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடந்தால் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் தபால் மூலமாக அல்லது neetimpact2021@gmail.com என்ற மின் அஞ்சலில் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துகளை அனுப்பினார்கள். தற்சாற்பு விவசாய சங்க தலைவர் கி.வே.பொன்னையன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வு என்பது 12-ம் வகுப்பு வரை படித்த பாடங்களில் இல்லாமல் புதிய கேள்விகளை கேட்பதாக உள்ளது. இந்த புதிய கேள்விகளுக்கான தயாரிப்புக்காக மாணவர்கள் மிகப்பெரிய பொருட்செலவில் நடைபெறுகிற தயாரிப்பு வகுப்புகளில் பங்கேற்று, இந்த தேர்வை எதிர்கொள்கிறார்கள். சாமானிய கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை வீட்டு பிள்ளைகள் இதுபோன்ற பெரும் பொருட்செலவு கொண்ட ஆயத்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்ல முடியாது.
23-ந்தேதிவரை...
12-ம் வகுப்புவரை நல்ல முறையில் படித்து விட்டு ஆயத்த தயாரிப்பு வகுப்புகளுக்கு செல்ல வசதி இல்லாத காரணத்தால் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை நீட் தேர்வு அடியோடு பறிக்கிறது. சமூக நீதி கோட்பாட்டுக்கு எதிராக உள்ள நீட் தேர்வு தமிழக மாணவர்களின் தகுதியை வளர்ப்பதில்லை. தகுதி படைத்தவர்களை வெளியில் நிறுத்தி விடுகிறது. எனவே நீட் தேர்வு எந்த விதத்திலும் தமிழக மாணவர்களுக்கு தேவையற்றது.
இவ்வாறு கூறி உள்ளார். இதுபோல் பலரும் தங்கள் கருத்துகளை அனுப்பி உள்ளனர். வருகிற 23-ந் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம்.
Related Tags :
Next Story