திருவள்ளூரை அடுத்த பூண்டியில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


திருவள்ளூரை அடுத்த பூண்டியில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 Jun 2021 11:57 AM IST (Updated: 18 Jun 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பூண்டி கிராமத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு பூண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிறிஸ்டி என்ற அன்பரசு தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் திருத்தணி பூபதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஒன்றிய அவைத்தலைவர் சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால், பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 
மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், டில்லிபாபு, கிறிஸ்துவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story