ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்
வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.
வாடிப்பட்டி,ஜூன்.
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்குட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை தாங்கினார். இதில் 24 விவசாயிகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 707 தேங்காய்களை 39 குவியல்களாக வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 12 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்ச விலையாக ரூ.14.60-க்கும், குறைந்த பட்சமாக ரூ.8.56-க்கும், சராசரியாக ரூ.9.48-க்கும் ஏலம் எடுத்தனர். அதற்குரிய பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 5 விவசாயிகளின் 303 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக ரூ.95-க்கு ஏலம் எடுத்தனர். மேலும் நேற்று முதல் முறையாக நிலக்கடலை ஏலம் நடந்தது. இதில் 4 வியாபாரிகள் கலந்து கொண்டு 529 கிலோ நிலக்கடலையை அதிகபட்ச விலையாக கிலோ ரூ.53-க்கு ஏலம் எடுத்தனர்.
Related Tags :
Next Story