இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,ஜூன்.
மதுரை அண்ணா நகர் பிரிவு மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அண்ணாநகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி. காலனி, காமராஜர் தெரு, ஆலமரம் பஸ் நிறுத்தம், முதலியார் காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதேபோல் எல்லீஸ்நகர் உபமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எல்லீஸ் நகர், எச்.எம்.டி. ஆர்.எச். பிளாக், டி.என்.எஸ்.சி.பி. அப்பார்ட்மென்ட், போடிலைன், எல்லீஸ் நகர் மெயின்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, கென்னட் குறுக்கு தெரு, பழங்காநத்தம் ரவுண்டானா, வைத்தியநாதபுரம், வசந்த் நகர், ஆண்டாள் புரம், அக்ரினி, வசுந்ரா, பசும்பொன்நகர், டி.வி. காலனி, பழைய மில் காலனி, ஏ.ஆர்.தோப்பு, சாய்பாபா கோவில் பின்புறம், சுப்ரமணியபுரம் போலீஸ் நிலையம், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, பழங்காநத்தம், புலித்தேவன் தெரு, எச்.எம்.எஸ். காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story