நடுரோட்டில் வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கிய கொரோனாவால் பரபரப்பு
வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கிய கொரோனா
உடல் முழுவதும் வெள்ளை துணி போர்த்தப்பட்டு, தலையில் கொரோனா வைரஸ் போன்ற முகமூடி அணிந்த நிலையில் 2 பேர் நேற்று பகலில் திடீரென்று மதுரை கோரிப்பாளையம் சாலையில் தலைதெறிக்க ஓடினார்கள். இதை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியில் தங்கள் வாகனத்தை நிறுத்தினார்கள். அப்போது டாக்டர், செவிலியர்கள் வேடமிட்டவர்கள் பெரிய தடுப்பூசியை நீட்டிக்கொண்டே ‘ஏய்... கொரோனாவே நில்!’ என்று சத்தம் போட்டு கொண்டு ஓடி வந்தனர். அவர்கள் அந்த தடுப்பூசியை செலுத்தியவுடன் கொரோனா வைரஸ் வேடமிட்டவர்கள் இறந்தது போல கீழே விழுந்தனர். அதன் பின்னரே வாகன ஓட்டிகள் அது விழிப்புணர்வு நாடகம் என நிம்மதி அடைந்தனர். கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஒரே வழி தடுப்பூசி போட்டு கொள்வது தான். அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று நடித்து காட்டிய விழிப்புணர்வு நாடகம் தான் இது.
Related Tags :
Next Story