கோபி, அந்தியூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு ‘சீல்’
கோபி, அந்தியூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஈரோடு
கோபி, அந்தியூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கோபி
ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய காரணங்களின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகிறார்கள். மேலும் ஊரடங்கை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோபி தாசில்தார் தியாகராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் கோபி நகரில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடைவீதி, யாகூப் வீதி, மார்க்கெட் ரோடு, வாய்க்கால் ரோடு ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி 4 கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். உடனே 4 கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.500 வீதம் என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அதிகாரிகள் 4 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரிராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செயல்பட்டு வந்த 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 10 கடைகளுக்கு ரூ.26 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விதிமுறையை மீறி செயல்பட்ட கடையின் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி உள்பட பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story