ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது; அமைச்சர் பேட்டி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
கொரோனா பரவல்
ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இணைப்பு சாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. போதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன், தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
இந்த நேரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. பொதுமக்கள் அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஆய்வு செய்து பார்வையிட்டு சென்ற போது மருத்துவக்கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறினார். எனவே அரசின் சேவைகளை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
Related Tags :
Next Story