தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் ரூ.200 கோடி முறைகேடு: குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிலம் எடுப்பு பணிகளை செய்துள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக ரூ.200 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரான நவகோடி நாராயணன் என்பவர் தமிழக அரசின் நில நிர்வாக ஆணையருக்கு புகார் அளித்தார். இது தேசிய நெடுஞ்சாலை ஆணைய விவகாரம் என்பதால் இந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க அவர் பரிந்துரை செய்தார். இது தொடர்பாக அப்போது தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்பட 5 அலுவலர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முறைகேடு தொடர்பாக புகார் அளித்த நவகோடி நாராயணனை நேற்று 2-வது முறையாக காஞ்சீபுரத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தன் தரப்பு ஆதாரங்களையும், ஆவணங்களையும் வழங்கினார்.
இதுதொடர்பாக நில அபகரிப்பு பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story