ஆரணியில் வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் பணி
ஆரணியில் வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் பணி
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் தலைமையில் நகராட்சியில், அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு 33 வார்டுகளிலும் வீடு வீடாக காய்ச்சல் கண்டறியும் முகாம், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார் மேற்பார்வையில் நடந்தது.
சுகாதார ஆய்வாளர் குமரவேலு மற்றும் களப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா? நோய் பாதித்தவர்கள் இருக்கிறார்களா? எனக் கேட்டு, காய்ச்சல் உள்ளவர்களுக்கு தொ்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. ஆக்சிஜன் அளவை பல்ஸ் மீட்டர் வைத்தும் சோதனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story