சமயநல்லூர், செட்டிக்குளம் பகுதியில் நாளை மின்தடை
சமயநல்லூர், செட்டிக்குளம் பகுதியில் நாளை மின்வினியோகம் இருக்காது.
மதுரை,
சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தெத்தூர் மற்றும் சோழவந்தான் பீடர்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே சமயநல்லூர், ஊர் மெச்சிக்குளம், தேனூர், வி.வி. மருத்துவமனை தியேட்டர் ரோடு, வளர்நகர், செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கொட்டம், சமத்துவபுரம், சர்வோதையா, எல்லையூர், ராமராஜபுரம், கூழாண்டிபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
பந்தய திடல் மற்றும் தமுக்கம் மின்பிரிவுக்கு உட்பட்ட அசோக் பீடரில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அழகர்கோவில் ரோடு(ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), டீன் குவார்ட்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, ஹச்சகான்ரோடு, கமலா முதல், 2-வது ெதரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மகால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
Related Tags :
Next Story