தாளவாடி அருகே ஒற்றை யானை அட்டகாசம்; ஒரு ஏக்கர் வாழைகள் நாசம்


தாளவாடி அருகே ஒற்றை யானை அட்டகாசம்; ஒரு ஏக்கர் வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 20 Jun 2021 1:57 AM IST (Updated: 20 Jun 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை வாழைகளை நாசப்படுத்தியது.

தாளவாடி
தாளவாடி அருகே கேர்மாளத்தை அடுத்த சுஜில்கரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 51). இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கேர்மாளம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் யானை வெங்கடேசின் தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் வாழை பயிரை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. 
யானை அட்டகாசம் செய்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்த வெங்கடேஷ் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கு வந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. ஒற்றை யானையின் அட்டகாசத்தினால் சுமார் ஒரு ஏக்கர் வாழைகள் நாசமானது. மேலும், பக்கத்து தோட்டத்தில் மாதேஷா என்பவர் சாகுபடி செய்திருந்த 100 வாழைகளும் சேதமானது.

Next Story