பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டமும் உயரத்தொடங்கியது.
இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பருவ மழையின் தீவிரம் குறைந்தது. இதனால் நேற்று பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 221 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 91.43 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 656 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகமாக காணப்படுவதால், நேற்று மாலை 4 மணிஅளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 92.20 அடியாக இருந்தது.
Related Tags :
Next Story