கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணிகள் மீண்டும் தொடங்கியது
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணிகள் மீண்டும் தொடங்கியது.
பவானிசாகர்
கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 224 ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.
பவானிசாகர் ஒன்றியத்துக்கு உள்பட்ட உத்தண்டியூர் ஊராட்சியில் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உத்தண்டியூர் பகுதியில் உள்ள ஓடையை ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்தபோது கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். மேலும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பணியை மேற்கொண்டார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்ட பணிகளில் 50 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story