ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 933 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 933 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 933 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
933 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 794 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
7 பேர் பலி
இதற்கிடையில் கொரோனாவுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் கடந்த மாதம் 21-ந் தேதியும், 74 வயது மூதாட்டி கடந்த 7-ந் தேதியும், 77 வயது மற்றும் 68 வயது முதியவர்கள் 10-ந்தேதியும், 55 வயது பெண் 17-ந்தேதியும் இறந்தனர்.
மேலும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் நேற்று முன்தினமும், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண் நேற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 531 ஆக உயர்ந்தது.
8,928 பேர் சிகிச்சை
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,363 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 73 ஆயிரத்து 335 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. அதிகபட்சமாக 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உள்ள 8 ஆயிரத்து 928 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story